பராமரிக்காத சாலைக்கு எதுக்கு சுங்கவரி? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதன், 9 டிசம்பர் 2020 (17:42 IST)
நொளம்பூரில் நெடுஞ்சாலை கால்வாயில் விழுந்து தாய், மகள் பலியான சம்பவம் குறித்து தாமாக முன் வந்து விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

மதுரவாயல் – வாலஜா நெடுஞ்சாலையில் நொளம்பூர் அருகே கால்வாயில் தாய், மகள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் நெடுஞ்சாலை துறையின் சரியான பராமரிப்பு இல்லாததுதான் தாய், மகள் உயிரிழக்க காரணம் என கூறப்படும் நிலையில் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மதுரவாயல் – வாலஜா நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படாததால் இந்த நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு 50% மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்