ரூ.6000 வெள்ள நிவாரணம்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (12:31 IST)
வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்றும், வெள்ள நிவாரணம் ரூ.6000- ஐ ரொக்கமாக வழங்கலாம் எனவும் ரூ.6000 வெள்ள நிவாரணம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் வெள்ள நிவாரணம் உடனடி தேவை, அதை தாமதப்படுத்த முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் வெள்ள நிவாரணம் தகுதியானவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று. நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நிவாரண தொகை ரூ.6000ஐ வங்கிக் கணக்கில் செலுத்த கோரியும், அதிகரிக்க கோரியும் மோகன்தாஸ், செல்வக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்