சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்துள்ளன. தற்போது சென்னையில் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்கவும், அபராதம் வசூல் செய்யவும் கால் செண்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 10 இடங்களில் அபராத தொகை கட்டுவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை திறந்து வைத்து பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சென்னையில் ஒரு நாளைக்கு 10,000 அபராத ரசீதுகள் வழங்கப்படுவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள், வாகன ஓட்டிகள் முறையாக அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், 5 அபராத ரசீதுகளுக்கு நிலுவையில் இருப்பவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உடனே செலுத்த வலியுறுத்தி வருவதாகவும், தொடர்ந்து அபராதம் செலுத்தவில்லை என்றால் நீதிமன்ற வாரண்ட் மூலம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.