அதன்படி செங்கோட்டையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 14, 17, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (16848), நாகர்கோவிலில் இருந்து நாளை புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரயில் (16352), குருவாயூரில் இருந்து இன்று மற்றும் 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹவுரா விரைவு ரயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து வருகிற14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.மயிலாடுதுறையில் இருந்து வருகிற 14-ந்தேதி புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16847), கச்சக்குடாவில் இருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயில் (07435), சென்னை எழும்பூரில் இருந்து 14-ந்தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து வருகிற 28, 31-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321-16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.