பிஆர்பி மீதான வழக்கு மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்

சனி, 6 ஆகஸ்ட் 2016 (23:26 IST)
கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
 

 
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மேலும் பட்டா இடங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன.
 
அதன்படி, பிஆர்பி நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி உள்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலூர் நீதிமன்றத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. பி.ஆர். பழனிச்சாமி உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகினர்.
 
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கும் அவர் ஒத்தி வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்