ஆப்பிள் போன், 100 பவுன் நகை – சுயேட்சை வேட்பாளரின் அதிரவைக்கும் வாக்குறுதிகள்!

வியாழன், 25 மார்ச் 2021 (08:10 IST)
தேர்தலில் வெற்றி பெற்றால் ஆப்பிள் போன் முதல் வங்கிக் கணக்கில் ஒரு கோடி என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளார்.

தேர்தல் நேரம் நெருங்கியுள்ள வேலையில் தமிழகம் மிக பரபரப்பாகியுள்ளது. மிகப்பெரிய கட்சிகள் எல்லாம் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன. அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதிகள் மக்களை பீதியடைய வைத்துள்ளன.

மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக குப்பைத் தொட்டி சின்னத்தில் களமிறங்கியுள்ளார் துலாம் சரவணன் என்பவர். இவர் வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் எல்லாம் மக்களை மிரளவைத்துள்ளன. அவரின் வாக்குறுதிகளில் ‘மக்கள் அனைவருக்கும் 1 கோடி ரூபாய் பணம் வங்கி கணக்கில் அளிக்கப்படும், தொகுதி மக்கள் அனைவருக்கும் 3 அடுக்கு மாடிக்கட்டிடம், பெண்களுக்கு 100 பவுன் நகை, ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய வகை ஹெலிகாப்டர்’ என ஒரு நாட்டின் பிரதமரால் கூட வழங்க முடியாத வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்