விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா?

ஞாயிறு, 19 ஜூன் 2016 (07:30 IST)
விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா? என பலருக்கும் சந்தேகம் உள்ளது.
 

 
இது குறித்து, சட்ட நிபுணர்களின் கருத்தை அறிய முயன்றோம். அவர்கள் கூறிய பதில் இதோ:
 
இந்திய குடும்பவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர குறைந்த பட்சம் திருமணம் ஆகி 1 வருட காலம் ஆகி இருக்க வேண்டும்.
தற்போதைய குடும்பவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தின்படி கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ஒரு சில தினங்கள் கழித்து நீதிமன்றத்தில் மறுதிருமணம் பற்றி மனு தாக்கல் செய்து விட்டு விவாகரத்து கிடைக்கும் முன் வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் கூறப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்