நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

Prasanth Karthick

ஞாயிறு, 24 நவம்பர் 2024 (10:59 IST)

தமிழக அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைப்பது குறித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்தும் பேசியுள்ளார்.

 

 

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண்நேருவின் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர் “கலைஞரின் கொள்கைகளை, லட்சியங்களை ஒவ்வொரு தொகுதியிலும் கொண்டு சேர்க்கிறோம். எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைப்பதா என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைப்பது? நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்” என பேசியுள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசு திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரை வைக்காமல், கரப்பான்பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்கள் பெயரை வைக்க வேண்டுமா? என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்த நிலையில், தற்போது உதயநிதியும் மறைமுகமாக கரப்பான்பூச்சி என்ற பெயரில் குறிப்பிட்டு பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்