கலாச்சாரத்தை சீரழித்து குட்டிச்சுவராக்கும் "பிக்பாஸ்" - கமலை சீண்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

புதன், 2 அக்டோபர் 2019 (14:26 IST)
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசியுள்ளார். 


 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களுடன்  கலந்துரையானடிய கமல், வளரும் தலைமுறையினர் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கியிருக்க கூடாது. அரசியல் பேசராவிட்டால் கல்வி, விவசாயம் முன்னேறாது. "கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் அரசியலில் கறை படிந்துள்ளது".  மேலும், வாரிசு அரசியல் சரியாக இருக்காது என்பதால் தான் ஜனநாயகம் வந்தது. ஆனால் தமிழக அரசியலில் குடும்ப அரசியலைப் பிரிக்க முடியாது” என கூறி மாணவர்களின் சில கேவிகளுக்கு பதிலளித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது கமல் ஹாசனின் இந்த பேச்சு குறித்து பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார், திடீரென காணாமல் போவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து கருத்து பேசிவிட்டு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு..அலிபாபா குகை போல் இருக்கும் அந்த வீட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.... வீட்டிலிருப்பவர்களும் பயந்து ஓடி வருகின்றனர். மேலும், தான் நடித்த வசூல் ராஜா MBBS படத்தின் மூலம்  நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்ட கமல்ஹாசன் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது தவறு என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்