கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்படியாக ஊருக்குள் வந்த ஒற்றை ஆண் காட்டுயானை அப்பகுதியில் உள்ள நெல்லிமலை, வெல்ஸ்புரம், கல்லாறு, ஓடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்து அங்கிருந்த விவசாய நிலங்களை துவம்சம் செய்தது.
மக்கள் அதை பாகுபலி யானை என அழைத்து வந்த நிலையில் அந்த சமயம் பாகுபலியை விரட்டுவதற்காக கும்கி யானைகள், காவலர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். சில நாட்கள் போக்கு காட்டிய பாகுபலி பின்னர் தானாகவே காட்டுக்குள் சென்று விட்டது.