சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமி குழந்தை வடிவில் மூலவராக அவதரித்து அருள் பாலித்த வைகாசி பௌர்ணமி திதி விசாக நட்சத்திரம் முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ணருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் உற்சவம், வேதிகா அர்ச்சனை, மூர்த்தி ஹோமம், மஹா சுதர்சனை ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று பின்னர் மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் ,இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் சாமிக்கு மகா தீபாரணை நடைபெற்றது.