அசானி புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

செவ்வாய், 10 மே 2022 (21:31 IST)
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு அசானி என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

வடமேற்கு திசையில் நகர்ந்த அசானி புயல் மத்திய கிழக்கு வங்கக் கடலில் தீவிரம் அடைந்துள்ளது.

இதனால், மேற்கு வங்கம், ஒரிஷா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அசானி புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இதன் தாக்கத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே, அசானி புயல் எச்சரிக்கையாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்