சீறிய சசிகலாவிடம் சவால் விட்ட ரூபா: சிறையில் நடந்த காரசார வாக்குவாதம்!

வியாழன், 20 ஜூலை 2017 (16:53 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து சிறை விதிகளை மீறி பல சலுகைகளை அனுபவித்து வருவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா அறிக்கை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனல் அதற்கு முன்னர் சசிகலாவுக்கும் ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
ரூபா சிறைக்கு சென்றதும் பல கைதிகள் சிறையில் நடக்கும் அநியாயங்களை பற்றி அவரிடம் கூறியுள்ளனர். அதில் சசிகலாவை பற்றி பலர் புகார் கூறியுள்ளனர். சிறையில் சசிகலாவின் ராஜ்ஜியம் தான். கைதிகள் கூறிய புகாரை வீடியோவாக பதிவு செய்த ரூபா பின்னர் சசிகலாவின் ஜெயில் அறைக்கு சென்றுள்ளார்.
 
அங்கு சென்ற ரூபா சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளையும் படம் பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த சசிகலா நீ எப்படி எனது அறைக்குள் வரலாம் என கேட்டுள்ளார். அதற்கு ரூபா நான் சிறைத்துறை அதிகாரி எனக்கு உரிமை உள்ளது என கடுமையாக கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
அதனையடுத்து சசிகலா நீ என்னை சாதாரணமாய் நினைத்துக்கொண்டாய். உன்னை என்ன செய்கிறேன் என பார் என்று கூறியதாகவும் அதற்கு ரூபா அதற்கு முன்னால் நான் செய்ய இருப்பதை பார் என கூறிய பின்னர் தான் அந்த அறிக்கையை அனுப்பியதாகவும், ஊடகத்தை சந்தித்து பிரச்சனையை பூதாகரமாக்கியதாகவும் தகவல்கள் கசிகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்