இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் “பள்ளிக்கூடத்தில் கல்வி கட்டணம் கட்டவில்லை என்பதால் என் தந்தையை அவமதித்தார்கள். பீஸ் கட்ட முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் தெருக்களுக்கு உங்கள் பையனை அழைத்து சென்று பிச்சை எடுங்கள் என நிர்வாகம் சொன்னது” என பேசியுள்ளார்.
அவர் நேரடியாக அதில் பள்ளியின் பெயரை சொல்லாவிட்டாலும் கூட, ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் என்பதன் மூலம் அவர் அந்த பள்ளியையே குறிப்பிட்டுள்ளார் என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.