ஜெயலலிதாவின் மகள் தான் எனவும், இது தொடர்பாக டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெ.வின் ரத்தமாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து வைத்து சேமிக்கும் அவசியம் ஏற்படவில்லை. எனவே, அவை எங்களிடம் இல்லை என அப்போலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவிற்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படியிருக்க, ஜெ.வின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்போலோ நிர்வாகம் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.