முடிஞ்சா எஸ்.வி.சேகர் என்னுடைய பதவியை தூக்கட்டும்: அண்ணாமலை சவால்..!

வெள்ளி, 2 ஜூன் 2023 (09:09 IST)
முடிந்தால் டெல்லி சென்று எஸ் வி சேகர் என்னுடைய பதவியை தூக்கம் முயற்சி செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த எஸ்வி சேகர், அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். மேலும் அண்ணாமலை குறித்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறி வருகிறார்.
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’எஸ்வி சேகர் அவர்கள் தாராளமாக டெல்லி சென்று என்னை பற்றி புகார் கூறி என்னுடைய பதவியை தூக்க முயற்சி செல்லலாம், அவருக்கு டெல்லி செல்வதற்கு பணம் இல்லை என்றால் நானே பிளைட்டில் டிக்கெட் போட்டு தருகிறேன் என்று கூறினார். 
 
தமிழக பாஜகவை பொறுத்தவரை பழம்பெருமை பேசிக்கொண்டு இருக்க முடியாது, எனது முன்னோர்கள் அப்படி, நான் இத்தனை வருடங்களாக பாஜகவில் இருந்தேன் என்று சொல்பவர்களின் கட்டுப்பாட்டில் நான் இருக்க மாட்டேன்
 
தமிழக பாஜக என்பது ஒரு காட்டாற்று வெள்ளம் போல், அதில் ஓரிருவர் அந்த வெள்ளத்தை தடுக்கலாம் என்று நினைத்தால் முடியாது, எஸ்வி சேகர் முடிந்தால் என்னுடைய பதவியை தூக்கிக் கொள்ளட்டும் என்று கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்