முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது: அண்ணாமலை அறிக்கை
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:02 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று இலங்கை தமிழர் குறித்த அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் நலன் காப்பதற்காக அவர் 317.40 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
முதல்வரின் இந்த அறிவிப்பு இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் நலன் காக்க முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது; வீட்டுவசதி, கல்வி ஆகியவற்றுக்காக ₹317.40 கோடி ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.