முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனை - பின்னணி என்ன?

திங்கள், 5 டிசம்பர் 2016 (07:36 IST)
முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 


 
 
கடந்த 70 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. மேலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆலோசனையின் பேரில் இருதய மருத்துவர்கள்  ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
 
மேலும், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதர்காக மருத்துவர்கள் அந்த பரிசோதனையை மேற்கொண்டனர். பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டவருக்கு, உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்காக இந்த சிகிச்சை செய்யப்படும். இதைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.
 
ஆஞ்சியோ பரிசோதனைக்கு பின் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய சிகிச்சை மருத்துவர்கள் தொடர்ந்து அவர் தீவிரமாக நிலையை கவனித்து வருகின்றனர். 
 
முதல்வரின் உடல் நிலை குறித்து இன்று காலை அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்