இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கு பலமுறை நாங்கள் தான் உயிர் கொடுத்தோம். 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்றார். அவருடைய அரசியல் வாழ்வை முடிந்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 1998ல் நாங்கள்தான் கூட்டணி வைத்து அவரையும் அதிமுகவையும் காப்பாற்றினோம்
2019ல் நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை இழந்திருப்பார், நாங்கள் எந்த துரோகத்தையும் செய்யவில்லை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொல்லி எங்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார் என்று குற்றம் சாட்டியுள்ளார்