அதிமுக மற்றும் பாஜக மீது பல குற்றசாட்டுகளை சுமத்தி வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் காற்றில் பறக்கவிடடு 7 மக்களவை சீட் ஒரு மாநிலங்களவை சீட் மற்றும் தேர்தல் நிதி ஆகியவற்றிற்காக அதிமுக மற்றும் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அன்புமணி ராமதாஸ், முதலில் செய்தியாளர்களின் கேள்விக்கு நிதானமாக, மேலோட்டமாக பட்டும் படாமல் பதில் அளித்து வந்தார்.
ஆனால், செய்தியாளர்கள் அன்புமணி ராமதாசை கேள்விகளால் துளைக்க பொருமை இழந்த அவர், அனைத்திற்கும் எல்லை உண்டு அமைதியாக இருங்கள். செய்தியாளர்கள் அசிங்கமாக நடந்து கொள்ள வேண்டாம்.. விட்டா என்னை அடிச்சிட்டுவீங்க போல.
போதும், போதும்.. நீங்கள் கேள்வி கேட்டதே போதும். என குறிப்பிட செய்தியாளர் ஒருவரை காட்டி, அவரின் மைக்கை வாங்குங்கள்.. சட்டமன்றத்தில் செய்வதை போல அவரின் மைக்கை ஆப் செய்யுங்கள், என்று கோபமாக குறிப்பிட்டார். இதனால், சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.