தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் 8வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்டவர் ராமஜெயம். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் ராமஜெயம் 5 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த ராமஜெயம் இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.