அப்போ ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சி இல்லையா?.....உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்
திங்கள், 13 மார்ச் 2017 (16:31 IST)
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா. நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கி பெரும் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சியே இல்லை என பத்திரிக்கையாளர் ஒருவர் உண்மையை கூறியுள்ளார்.
பெண்களை தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆட போவதாக செய்திகள் முதலில் வெளிவந்தது. அவர் ஐ.நா. உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. நடத்தும் நிகழ்ச்சி என எல்லோராலும் பெரிதாக பேசப்பட்டது.
இதையடுத்து அவர் ஆடிய வீடியோ இணையதளத்தில் வெளியானது. மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த வீடியோவை வைத்து அவரை பயங்கரமாக கேலி செய்தனர். இரண்டு நாட்கள் சமூக வலைதளம் முழுவதும் அவரது ஆட்டத்தை பற்றிதான் அனைவரும் பேசி வந்தனர்.
இந்நிலையில் அவர் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சி இல்லை என பத்திரிக்கையாளர் பிரமோத் குமார் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
ஐ.நா.வில் உள்ள இந்திய அரசு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடியுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நிகழ்ச்சி இது. ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் யார் வேண்டுமானாலும் அந்த அறையை புக் செய்து நிகழ்ச்சி நடத்தலாம்.
ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன் நிகழ்ச்சி தான் உண்மையான ஐ.நா. நிகழ்ச்சி. ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது உண்மையான ஐ.நா.நிகழ்ச்சி இல்லை என்பதை தெரிவிக்கதது பெரும் வெக்கக்கேடு என தெரிவித்துள்ளார்.