பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ”வீரம் நிறைந்த மண்ணில் தமிழர்களின் உணர்வையும் வீரத்தையும் காக்க நடத்தப்படுவது ஜல்லிக்கட்டு. இதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை, தடை என கூறிவருவது எத்தனை நாளைக்கு? இதற்கு முடிவு இல்லையா?
தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அ.தி.மு.க. அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை. ஜால்ரா தான் போடுகின்றனர். அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியிடம் கூறவில்லை. நமஸ்காரம் தான் செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.