செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரின் அனல் பறக்கும் வாதம்..!

புதன், 12 ஜூலை 2023 (11:12 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு மூன்றாவது நீதிபதியின் கீழ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் வழக்கறிஞர் வாதாடினார். 
 
இதனை அடுத்து இன்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது அனல் பறக்கும் வாதத்தை முன்வைத்து வருகிறார். சட்டவிரோத பணமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறை கடமை என்று கூறிய வழக்கறிஞர் துஷார் மேத்தா குற்றத்தை கண்டுபிடிக்கவும் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்யவும் அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து, வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது என்றும் அவர் வாதம் செய்து வருகிறார். ஏற்கனவே இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ள நிலையில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் அவர்களின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்