திமுக வேட்பாளரை ஆதரித்த அதிமுக கவுன்சிலர்கள்! – கட்சியை விட்டு தூக்கிய தலைமை!

சனி, 5 மார்ச் 2022 (09:32 IST)
நேற்று தமிழக நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள் தேர்வு நடந்த நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்த அதிமுக கவுன்சிலர்களை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல கட்சிகளும் வென்ற நிலையில் நேற்று மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் வாக்களித்ததால் அவர் வெற்றி பெற்றார். இதனால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதுபோல அயோத்திப்பட்டிணம் ஊராட்சியில் அதிமுக ஒன்றிய தலைவர் மீது அதிமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்