போயஸ் கார்டனில் குவியும் தொண்டர்கள்: மோடி ஒழிக கோஷத்தால் பரபரப்பு

வெள்ளி, 17 நவம்பர் 2017 (23:36 IST)
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தில் கடந்த சில மணி நேரமாக வருமான வரித்துறையினர் நீதிபதியின் அனுமதி பெற்று சோதனை நடத்தி வருகின்றனர்.


 


சென்னை அடையாறில் உள்ள ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் அதன் தொடர்ச்சியாக வேதா இல்லத்தில் பூங்குன்றனின் அறையில் மட்டுமே சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் விவேக் மற்றும் பூங்குன்றன் உள்ளே சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானதும் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் இந்த இரவிலும் வேதா இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். அவர்கள் 'மத்திய அரசு ஒழிக', மோடி ஒழிக என்று கோஷமிட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்