யூட்யூப் பிரபலமான கிஷோர் கே ஸ்வாமி திமுகவை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரோகிணி கிஷோர் கே சாமி மீது புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தன்னையும், மறைந்த தனது கணவர் நடிகர் ரகுவரனையும் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.