நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கம்?

சனி, 18 பிப்ரவரி 2017 (10:06 IST)
கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டுள்ளதாகம், அதிலிருந்து அவர் தப்பி வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
மலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார். இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டின் அருகே, ஒரு காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார் எனவும், அந்த கார் எர்ணாகுளம், ஆலுவா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்து பாவனா தப்பி வந்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அவரிடம் இதற்கு முன் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர்தான் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்..

வெப்துனியாவைப் படிக்கவும்