ஸ்ரீதேவி மரண செய்தி வெளியானது முதல், கடந்த 3 நாட்களாகவே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவரை பற்றிய செய்திகளையே பெரிதும் வெளியிட்டன. தொலைக்காட்சிகளில் அவர் தொடர்பான வீடியோக்களை அதிகம் இடம் பெற்றது. இதைக் கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் சன்னிலியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து பலர் அவரின் கருத்துக்கு எதிராக, நீங்கள் இதுபோன்ற ஆபாச பதிவுகளை இடலாமா? என்கிற ரேஞ்சில் கேள்வி எழுப்பினர். ஆனால், இது கிண்டலுக்குத்தான், மேலும், இது என்னுடைய கருத்து அல்ல, வேறு ஒருவரின் கருத்தை நான் காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறேன் என கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளர்.