மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலயில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த (ஆம் ஆத்மி ) சேர்ந்த பிரமுகர் குர்பிரீத் சிங் கோபி சோழா இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் குர்பிரீத் சிங் கோபி சோழா இன்று கபூர்தலா மாவட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோயிண்ட்வால் சாகிப் ரயில் நிலையம் மூடப்பட்டிருந்ததால் காரில் உட்கார்ந்திருந்தார்.