இதுகுறித்து தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தேமுதிக வரவேற்கிறது.
இந்த மசோதாவை கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்திருப்பது ஓட்டு மொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.