19ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

வெள்ளி, 18 நவம்பர் 2022 (09:55 IST)
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தகவல்.


வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 20, 21 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலில் 19ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி 3 நாட்களுக்கு நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Edited by: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்