வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் பெருமழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இன்று மாலைவரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருங்களத்தூர்- நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே சாலையில் முதலை ஒன்று நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.