இந்த நிலையில் தற்போது ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் இதில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்