திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதை அடுத்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். சென்னையில் பெய்த கனமழையில் பாடம் கற்றுக் கொண்ட தமிழக அரசு தென் மாவட்டங்களில் பெய்த கன மழையில் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதலாக 8 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து உள்ளதாகவும், அதில் சிறப்பு பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளுடன் தேசிய பேரிடர் மீட்புப்படை நெல்லைக்கு வருகை தந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.