சென்னை ஐஐடியில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதன், 27 ஏப்ரல் 2022 (11:52 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஏற்கனவே ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111 என்ற இருந்த நிலையில் இன்று மீண்டும் 52 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கையை 163 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் உள்ள அனைவருக்கும் கொரனோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடி சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதாகவும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்