இதனை அடுத்து நான்கு மாணவர்கள் உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் பாத்திமா என்ற மாணவி உயிரிழந்தார். இதனை அடுத்து கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை ஆசிரியர், ஆசிரியர், சுகாதாரத் துறை அலுவலர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய், சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க முதலமைச்சராக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது