இந்த நிலையில் தற்போது மேலும் 3 மாணவிகள் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்ததை அடுத்து காவல்துறையில் இதுவரை அவர் மீது 5 மாணவிகள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் PBSS பள்ளியின் மேலும் சில ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அந்த ஆசிரியர்களிடமும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.