இன்றைய விசாரணையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என கூறிய நீதிபதிகள், சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தியது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.