அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

வியாழன், 29 செப்டம்பர் 2016 (22:02 IST)
தூத்துக்குடியில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சில நாட்ளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் நெல்லையில் 55 வார்டுகளில் 11 பேர் திரும்ப போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல் தூத்துக்குடியில் 60 வார்டுகளில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்த 17 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
இந்நிலையில் இன்று மதியம் கடந்த தேர்தலில் 3வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மண்டல பகுதி இணைச்செயலாளர் கோகிலா மேற்கு பகுதி அவைத்தலைவரான சந்தானம், 49வது வார்டு வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட வட்ட பிரதிநிதியான ரமேஷ் ஆகியோர் அதிர்ப்தி அடைந்தனர்.
 
இதனையடுத்து, தங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர்கள் 3 பேரும் திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்