வருடத்திற்கு வருடம் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. டெங்கு என்பது ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஏடிஸ் ஏகிப்டி(AEDES AEGYPTI) என்ற ஒரு வகை கொசுவால் பரப்பப்படுகிறது.