தமிழகத்தில் நாளை வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தர்மபுரி, வேலூர், நாகை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், என சென்னை வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.