அவரிடம் விசாரணை செய்தபோது தனது 15 வயது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும் காரில் சென்று கொண்டிருந்தபோது தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை அடுத்து அவரை குடும்பத்தினர் கேலி செய்ததாகவும் அப்போது தனது மகள் விளையாட்டாக தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டதாகவும், இது வேடிக்கையாக தான் நடந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து பொதுமக்கள் இளம் பெண் காரில் கடத்தப்பட்டதாக தவறாக நினைத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சாலையில் இதுபோன்ற விளையாட்டுத்தனம் செய்யக்கூடாது என்று மகேந்திரனை எச்சரித்து அறிவுரை கூறிய காவல்துறையினர் அவரை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.