அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு 15 பர்கர்கள் வருகை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆர்டர் செய்தார்களா?

திங்கள், 17 ஜூலை 2023 (13:20 IST)
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொன்முடி மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் அதிகாரிகள் ஆர்டர் செய்த 15 பர்கர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆன்லைன் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பர்கர் ஆர்டர் செய்ததாகவும் ரூ.175 மதிப்புள்ள 15 பர்கர்கள் பொன்முடி வீட்டிற்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்த போதும் இதேபோல் ஆன்லைனில் உணவுகள் ஆடர் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்