மனநோயாளி கொலை வழக்கில் 10 பேர் கைது - போலீஸார் அதிரடி

வெள்ளி, 11 மே 2018 (08:25 IST)
திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து, பொதுமக்கள் மனநோயாளி ஒருவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் போலீஸார் அதிரடியாக 10 பேரை கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக் கருதி பொதுமக்கள் மனநோயாளி ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்து உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.
 
இதனையடுத்து குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில்  மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அரங்கம்குப்பம், லைட்அவுஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையை பலரை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்