சுவை மிகுந்த மீன் பிரியாணி செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
மீன்- 1/2 கிலோ
அரிசி - 3 டம்ளர்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
பட்டை -  3
லவங்கம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 1
புதினா - தேவையான அளவு, 
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும், மேலும் இஞ்சி- பூண்டினை தோல் நீக்கி தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து  வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். 
 
அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும். 
 
அடுத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை பழச் சாறு உப்பு,  மீன், அரிசி, 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் விட்டு இறக்கினால் மீன் பிரியாணி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்