சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு

வியாழன், 18 ஏப்ரல் 2013 (15:05 IST)
FILE
சென்னை வியாசர்பாடியில் 10 ஆம் வகுப்பு மாணவியை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி கடத்திச் சென்று கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியைச் சேர்ந்த 16 வயதுடைய ராகி 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் கடந்த 15 ஆம் தேதி தோழியை பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவே இல்லை.

ராகியை காணாததால் பல இடங்களில் தேடிய அவரது தந்தை சரவணன், காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ராகி காணாமல் போன அதே நாளில், அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரான 40 வயதுடைய சுரேஷ் என்பவரையும் காணவில்லை. எனவே சுரேஷ் மீது காவல்துறையினரின் சந்தேகம் விழுந்தது. அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரித்தபோது ராகியை சுரேஷ் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராகியை சுரேஷ் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கடத்தி சென்று கற்பழித்தது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் ராஜமுந்திரி சென்று மாணவி ராகியை மீட்டனர். சுரேசை கைது செய்து, அவர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்