பாதுகாப்பு இல்லை! மீனவர்களுக்கு ஆயுதம் தாருங்கள்- உதயகுமார்

வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (18:29 IST)
FILE
தமிழக மீனவர்களை தாக்கிக்கொண்டிருக்கும் இலங்கை அரசை நட்பு நாடு என்று கூறுவதா என்று கேள்வி எழுப்பிய உதயகுமார் மீனவர்களுக்கு பாதுகாப்பு தரமுடியாத நிலையில் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று இடிந்தகரையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை கடற்படையினை கண்டித்தும் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உதயகுமார்,

"78 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து துன்புறுத்தியது, மேலும் கச்ச தீவு கோடியக்கரை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை அடித்து துன்புறுத்தியுள்ளது.

இவ்வாறு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் மத்திய அரசு இலங்கையினை நட்பு நாடு என்று கூறுகிறது. இதனாலேயே தமிழக மீனவர்களின் உரிமைக்காக இந்த உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொள்கின்றோம்.

அது மட்டுமில்லாமல் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்"

என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்