சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மீது ஜெ. அவதூறு வழக்கு

வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (15:49 IST)
FILE
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த அவதூறு வழக்கு தொடர்பான மனுவை முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் இந்த மாதம் இரண்டாம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சி வேண்டும் என்றே முதல்வரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்