புதுச்சேரியில் காங்கிரஸ் வன்முறை; அடிதடி; ரகளை!

ஞாயிறு, 17 மார்ச் 2013 (16:20 IST)
FILE
புதுச்சேரியில் நாராயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர் இதனையடுத்து தகராறு மூண்டது வேல்முருகன் கட்சியினர் மீது காங்கிரசார் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மத்திய மந்திரி நாராயணசாமி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவை வருவது வழக்கம். அப்போது கம்பன் கலை அரங்கில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

மத்திய மந்திரி நாராயணசாமி புதுவை கம்பன் கலை அரங்கில் உள்ள தனது அலுவலகத்துக்கு வருவதாக காங்கிரசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மத்திய மந்திரி நாராயணசாமியை சந்திக்க கம்பன் கலை அரங்கில் காங்கிரசார் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென போலீஸ் படையினர் கம்பன் கலை அரங்கத்துக்கு வந்தனர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் ஐ.நா. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க கோரியும், இலங்கை பிரச்சினையில் கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மத்திய மந்திரி நாராயணசாமியை தமிழக வாழ்வுரிமை (வேல்முருகன் கட்சியினர்) முற்றுகையிட வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உடனே எதிர்த்தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தயாராயினர். இந்த நிலையில் வேல்முருகன் கட்சியினர் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் 10 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். நேராக மோட்டார் சைக்கிளில் கம்பன் கலை அரங்கத்துக்கு நுழைந்த அவர்களை தயாராக நின்று கொண்டிருந்த காங்கிரசார் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். இதனால் வேல்முருகன் கட்சியினர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் காங்கிரசார் அவர்களை விடாமல் ஓட ஓட விரட்டி தாக்கினர். மேலும் போலீசாரும் வேல்முருகன் கட்சியினரை தாக்கினர்.

மேலும் காங்கிரசார் போலீசையும் கேள்வி கேட்டனர். சத்தம் போட்டனர். இதனியடுத்து வேல்முருகன் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீதர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்